Wednesday 9 November 2011

பிரபாகரன் மீது ஆணை: பதவியேற்பு விழாவில் பரபரப்பு !

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்திய பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அல்லது பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார் ஒருவர். யார் இவர் என்று பார்ப்போம்.


பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார். கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.


உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?


1980௮6 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.


ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.

இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

Thermal Transfer Ribbons Online

ProXcan is a direct supplier of ten different ribbon manufacturers with supply facilities all over the North America. The real numbers are 7 in United States and 3 in Canada. Each of these manufacturers has production strengths and capabilities that allow them to produce quality products at competitive pricing. ProXcan products sells only premium ribbons at the lowest prices possible. We also encourage you to check out Proxcan with any reputable business agencies. They'll tell you that ProXcan has had a quality record since it opened. We built ProXcan on a foundation of a few basic commitments: Hard work, personalized service, quality products, and low overhead cost.
visit now. www.proxcan.com

தனது முழு உடலையும் தானமாக அளித்து சாதனை படைத்த நபர்


இங்கிலாந்தில் உள்ள டோர்குலே பகுதியை சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ்(61). டாக்சி டிரைவரான இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஆலன் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
அவரது விருப்பப்படி உடல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மருத்துவ மையத்தில் தானமாக வழங்கப்பட்டது. அங்கு அவரது உடல் சிறப்பு ஓபரேசன் செய்து மருந்துகள் தடவப்பட்டு அழுகாத நிலையில் மம்மி போன்று உலர வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் முழுமையாக மம்மி ஆகிவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் நிபுணர் மருத்துவர் ஸ்டீபன் பக்லீ இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். மூன்று மாதங்களில் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார். மூன்று ஆயிரம் ஆண்டுகளில் டாக்சி டிரைவர் ஆலன் பில்லிஸ் முதல் மம்மி மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

7ஆம் அறிவு வசனம் நீக்கம்; இலங்கையில் தமிழ் படங்களை வெளியிட எதிர்ப்பு

தீபாவளி வெளியீடான சூர்யாவின் '7 ஆம் அறிவு' திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கூறப்பட்ட வசனங்கள் இலங்கையில் நீக்கப்பட்டமைக்கு எதிராக, இனிவரும் காலங்களில் இலங்கையில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வசனங்கள் நீக்கப்பட்ட நிலையிலேயே இத்திரைப்படம் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால்இ இந்தியாவின் தமிழ்த் திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இனிவரும் காலங்களில் இலங்கையில் எனது திரைப்படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார். '7ஆம் அறிவு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இ தயாரிப்பாளர்கள் அனைவரும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்இ 'இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின்இ சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்இ' என்று கூறப்பட்டுள்ளது.