தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Sunday, 7 August 2011
லண்டனில் கலவரம்: தமிழர் கடைகளும் எரியூட்டப்பட்டது !
லண்டன் புறநகர் பகுதியான டோட்டனம் என்னும் இடத்தில் மூண்ட கலவரம் காரணமாக 2 போலீஸ் வாகனம் உட்பட பல கட்டிடங்கள் எரியூட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பொலிசார் கடந்த வியாழக்கிழமை சுட்டுள்ளனர். இதனை எதிர்த்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் கலவரமாக மாறியது. இதனைத் தடுக்க வந்தபொலிசார் மீது அக்ரோஷமான தாக்குதலை நடத்திய ஆபிரிக்க இனத்தவர்கள் கண்ட இடங்களை எல்லாம் எரியூட்டியுள்ளனர். பொலிசாரின் வாகனம், ஒரு பேரூந்து மற்றும் கட்டிடங்களை அவர்கள் எரியூட்டியுள்ளனர். அல்டி எனப்படும் பல்பொருள் அங்காடி உட்பட பல கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
சுமார் 30 பொலிசார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்கள் சுமார் 40 குண்டர்களைக் கைதுசெய்தும் உள்ளனர். ஆபிரிக்க இனத்தவர்கள் அதிகம் வாழும் டோட்டனம் பகுதியும் மற்றும் பிரிக்ஸ்டன் பகுதியும் மிகவும் ஆபத்தான இடங்களாக பொலிசாரால் கருதப்படுகிறது. கொலை கொள்ளைகள் நிறைந்த இடமாகவும் அது கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் தகவல்கள்படி கலவரம் நடந்த இடம் ஒரு போர்களம்போலக் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் கட்டிடங்கள் எரிந்த நிலையில் உள்ளதாகவும் நேற்று இரவு கலவரத்தைப் பயன்படுத்தி பலர் வீடுகளிலும் எரியும் கட்டிடங்களையும் உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் ஆயிரக்கணக்கில் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது. எரியூட்டப்பட்ட கட்டிடங்களில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடை ஒன்றும் கருகிச் சாம்பலாகியுள்ளது எனவும் அறியப்படுகிறது. சிறிய பல்பொருள் அங்காடி வைத்திருந்த இவரது கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இக் கலவரத்தால் பல லட்சம் பவுண்டுகள் நாசமாகியுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ள அதேவேளை, பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தல உத்தியோகத்தர் இதற்கு கடும் கண்டன் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கலவரங்களை தாம் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவது இல்லை என அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் விரட்டியடிப்பு !
தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறக்கோரி தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடித்தியுள்ளனர். பணத்தைப் பார்க்காமல் மனச்சாட்சியைப் பாருங்கள் ! இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களை ஒரு கணம் யோசியுங்கள் ! என்ற கோகஷங்களால் லாட்ஜ் உரிமையாளர்கள் மனம்மாறி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனை அடுத்து பெட்டி படுக்கைகளோடு சிங்களவர்கள் வேறு லாட்ஜ் ஒன்றைத் தேடி அங்கிருந்து அகன்றனர்.
அவர்கள் எங்கு தங்கினாலும் தாம் அங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துவோம் என தமிழ் உணர்வாளர்கள் கூறியுள்ளனர். இனப்படுகொலை புரிந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கும் தகுதி இல்லை என உணர்வாளர்கள் அதிர்வு இணைய நிருபரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பியுள்ள நிலையில் , தமிழ் நாட்டில் தற்சமயம் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முந் நாள் போராளிகளுக்கு செலவு 2.5 பில்லியனாம் !
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் முதல் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முதலாம் ஆண்டில் 1.8 பில்லியன் ரூபா செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் எந்தத் தரப்பினரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில நாடுகளின் அரசாங்கங்களும் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் யுத்த வலய மீள்குடியேற்ற நடவடிக்கைளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை பயன்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)