Sunday 11 December 2011


கனடாவில் இருந்து சிறிய அளவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கலவியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட வாழ வைப்போம் அமைப்பின் மிகப் பெரும் திட்டமான December 27 கு முன்பு 250 போரினால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு உதவும்திட்டத்தை கடந்த சில வாரங்களாக செய்து வந்தது .பலவேறு நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் 150 குடும்பங்கள் என்னும் என்னை தண்டி வெற்றி கரமாக நகர்கிறது . 

,e;j ej;jhu; gz;bifia vk; jha; kz;zpd; nrhe;jq;fSld; nfhz;lhLNthk;. cq;fshy; Kbe;j msT Nfs;tpfspd;wp cjtTk;. cq;fs; md;whl Njitfspy; RUf;ff;$batw;iw RUf;fp> kdjpy; ,lNkw;gLj;jp ,e;j ej;jhu; gz;bifia mu;j;jKs;sjhf;FNthk;.  

Sunday 4 December 2011

தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்த கனடிய தமிழர் ( Video in)

கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.
தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4o28NFX7qJg

96 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் !

உலக புகழ் பெற்ற குளிர்பானம் ‘கோக கோலா’. அமெரிக்காவின் கொலம்பஸ் நகரை சேர்ந்த பார்மசிஸ்ட் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவர் 1886ல் இந்த பானத்தை கண்டுபிடித்தார். ஆசா காண்ட்லர் என்பவர் 1889ல் இதன் தயாரிப்பு உரிமையை பெற்று, 1892ல் தி கோக கோலா கம்பெனியை தொடங்கினார்.



அந்த கால கட்டத்தில், தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது. இந்நிலையில், பாட்டில் வடிவத்தை மாற்ற கோக் கம்பெனி 1915ல் போட்டி அறிவித்தது.
தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்’ என்பது கண்டிஷன். இயர்ல் டீன் என்பவர் வரைந்து அனுப்பிய டிசைன் சிறந்ததாக தேர்ந் தெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோதனைக்காக சில பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
அடிப்பகுதியைவிட நடு பகுதி குண்டாக இருந்ததால், கன்வேயர் பெல்ட்டில் செல்லும்போது பாட்டில் விழுந்துவிட்டது. பின்னர், டிசைன் சற்று மாற்றப்பட்டு, பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
சோதனைக்காக தயாரித்ததில் 2 பாட்டில்கள் மிஞ்சின. ஒன்று, அட்லான்டாவில் உள்ள கோக் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பாட்டிலை இயர்லின் பேரன் பிராட் வைத்திருந்தார்.
ஜூலியன் நிறுவனம் மூலமாக அதை அவர் தற்போது ஏலம் விட்டார். 96 ஆண்டு பழமையான கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இயர்ல் வரைந்து அனுப்பிய பேப்பர் ரூ.1.16 கோடிக்கு ஏற்கனவே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Thursday 17 November 2011

Ullathil nalla ullam Urangaadhenbadhu Vallavan vaguthadhadaa - Karnaa Varuvadhai edhirkolladaa

கனடாவில் இருந்து சிறிய அளவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கலவியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட வாழ வைப்போம் அமைப்பின் மிகப் பெரும் திட்டமான November 27 கு முன்பு 250 போரினால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு உதவும் திட்டத்தை கடந்த சில வாரங்களாக செய்து வந்தது .பலவேறு நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் 150 குடும்பங்கள் என்னும் என்னை தண்டி வெற்றி கரமாக நகர்கிறது .

Wednesday 9 November 2011

பிரபாகரன் மீது ஆணை: பதவியேற்பு விழாவில் பரபரப்பு !

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்திய பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அல்லது பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார் ஒருவர். யார் இவர் என்று பார்ப்போம்.


பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார். கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.


உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?


1980௮6 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.


ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.

இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

Thermal Transfer Ribbons Online

ProXcan is a direct supplier of ten different ribbon manufacturers with supply facilities all over the North America. The real numbers are 7 in United States and 3 in Canada. Each of these manufacturers has production strengths and capabilities that allow them to produce quality products at competitive pricing. ProXcan products sells only premium ribbons at the lowest prices possible. We also encourage you to check out Proxcan with any reputable business agencies. They'll tell you that ProXcan has had a quality record since it opened. We built ProXcan on a foundation of a few basic commitments: Hard work, personalized service, quality products, and low overhead cost.
visit now. www.proxcan.com

தனது முழு உடலையும் தானமாக அளித்து சாதனை படைத்த நபர்


இங்கிலாந்தில் உள்ள டோர்குலே பகுதியை சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ்(61). டாக்சி டிரைவரான இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஆலன் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
அவரது விருப்பப்படி உடல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மருத்துவ மையத்தில் தானமாக வழங்கப்பட்டது. அங்கு அவரது உடல் சிறப்பு ஓபரேசன் செய்து மருந்துகள் தடவப்பட்டு அழுகாத நிலையில் மம்மி போன்று உலர வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் முழுமையாக மம்மி ஆகிவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் நிபுணர் மருத்துவர் ஸ்டீபன் பக்லீ இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். மூன்று மாதங்களில் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார். மூன்று ஆயிரம் ஆண்டுகளில் டாக்சி டிரைவர் ஆலன் பில்லிஸ் முதல் மம்மி மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

7ஆம் அறிவு வசனம் நீக்கம்; இலங்கையில் தமிழ் படங்களை வெளியிட எதிர்ப்பு

தீபாவளி வெளியீடான சூர்யாவின் '7 ஆம் அறிவு' திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கூறப்பட்ட வசனங்கள் இலங்கையில் நீக்கப்பட்டமைக்கு எதிராக, இனிவரும் காலங்களில் இலங்கையில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வசனங்கள் நீக்கப்பட்ட நிலையிலேயே இத்திரைப்படம் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால்இ இந்தியாவின் தமிழ்த் திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இனிவரும் காலங்களில் இலங்கையில் எனது திரைப்படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார். '7ஆம் அறிவு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இ தயாரிப்பாளர்கள் அனைவரும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்இ 'இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின்இ சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.
உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்இ' என்று கூறப்பட்டுள்ளது.

Tuesday 25 October 2011

நிதி நெருக்கடி காரணமாக விக்கிலீக்ஸ் வீழ்ந்தது


கடும் நிதி நெருக்கடியில் நிலையால் இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய பல்வேறு இரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது விக்கிலீக்ஸ்.
இதன் தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் பிணையில் உள்ளார்.
இந்நிலையில் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வழிகளை, அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்ட், வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பேல் போன்ற நிதி நிறுவனங்கள் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன. இதுகுறித்து, நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இனிமேல் ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி முழு வீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 23 October 2011

துர்நாற்றம் அடிக்கும் கடாபியின் சடலம்: மக்கள் மூக்கைப் பொத்தும் நிலை !

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் பி.பி.சியிடம் தெரிவித்தார். மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது. சடலத்தைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

கடாபியின் சடலத்துக்கு என்ன நடக்கவேண்டும் என்பது பற்றி வெவ்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவியதாக பி.பி.சி செய்தியாளர் கூறினார். அவரின் உடலை தகுந்த குளிரூட்டும் அறையில் வைக்காமல் விட்டதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது

Sunday 16 October 2011

Canada’s 17 year old Abicumaran Uthamacumaran Fights for the Cure

Attending McGill University is 17-year-old Abicumaran (Abi) a recent graduate of Marymound High School who hopes to find a cure for cancer. It appears to be his life mission. Abi took an interest in medicine at an early age. At 5 he said he was reading Darwin and the Origins of life. Abi’s parents are ordinary folks – his mother a housewife and his father works at a hotel but they produced this delightful child prodigy who hopefully will be the person to take away our fears of cancer.
He has a younger brother and sister at the school. The Uthamacumaran children were born in Montreal after his parents, who are Tamil, came here  from Sri Lanka.”My parents motivated us to get into the sciences,” he says, “and to make a contribution and an impact on society.”
When he was at Coronation elementary school, Uthamacumaran worked on a robotics program. He travelled abroad, to Japan in 2005 and Germany in ’06, to participate in science competitions.
For the German competition, the students created Scibot, a robot Uthamacumaran says was “as tall as me at the age of 10.” For the exhibit, Uthamacumaran dressed as a mad scientist and danced to James Brown’s I Feel Good while the robot replicated his movements.
Cancer research is more complex and involves less dancing. Uthamacumaran’s study of the disease has led him to a holistic approach that emphasizes  the steps one can take to reduce the risk of contracting the disease.
“Dietary options, nutrition, daily activities and the radiation sources you’re surrounded by, like television and music players,” Uthamacumaran
said. He said everything we do in our modern industrialized society impacts the occurrence of cancer.
He believes anyone can achieve whatever they want. When you put your mind to it you can do it, he said the sky extends forever. There is no sky.”"

17-year-old Montreal science prodigy hopes to cure cancer.

Saturday 1 October 2011

நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்

போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.
இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை ‘இலவச’ பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை.
கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.
ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?
தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.
‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்…”
பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.
அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ராம் லீலா மைதானத்தை நோக்கி இவரும் சென்றார். ஆனால், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவரால் அண்ணா ஹஸாரேவின் அருகில்கூட செல்ல முடியவில்லை. கூட்டத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பகவான் தாஸ், அப்படியே திரும்பினார். ஆனாலும் அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?!

Wednesday 21 September 2011

Thermal Transfer Ribbons

ProXcan is a direct supplier of ten different ribbon manufacturers with supply facilities all over the North America. The real numbers are 7 in United States and 3 in Canada. Each of these manufacturers has production strengths and capabilities that allow them to produce quality products at competitive pricing. ProXcan products sells only premium ribbons at the lowest prices possible. We also encourage you to check out Proxcan with any reputable business agencies. They'll tell you that ProXcan has had a quality record since it opened. We built ProXcan on a foundation of a few basic commitments: Hard work, personalized service, quality products, and low overhead cost. visit now  www.proxcan.com

Monday 5 September 2011

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் புலனாய்வு பிரிவு?

இறுதிக் கட்ட போரின் போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவு மதாந்த சம்பளம் வழங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உறுப்பினர் ஒருவருக்கு தலா மூவாயிரம் ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மறைந்து வாழும் சுமார் ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஊதியம் வழங்கப்படுவதாக அரச புலானய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் ஒருவரினால், தென் இந்திய புலித் தலைவர் ஒருவருக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறித்த உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை மஹாபோதி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நபர்கள், ஊதியம் பெற்றுக்கொள்ளும் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர்களை தொடர்ந்தும் அமைப்பில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறு மாதாந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?



இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com
இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

Saturday 27 August 2011

அமெரிக்காவும் ஈழத்தமிழர் விவகாரமும்! - ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் அப்படி என்னதான் பேசித் தொலைத்தார்கள்?


0jaya_ciliஅமெரிக்கா எங்கள் விவகாரத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறதா என்று நாங்களே நம்ப மறுத்து ஒரு வேளை அப்படியெல்லாம் இருக்காது என்று ஆசுவாசப்படுத்துகிற மாதிரிச் செய்திகள் தாராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.
போதாக்குறைக்கு ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசிய செய்தியும் வெளிவந்தாயிற்று. இப்போது எல்லோரது மனங்களிலும் தொக்கி நிற்கின்ற கேள்வி அப்படி என்ன தான் பேசித் தொலைத்தார்கள் என்பது.
அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது “விலாவாரியாகத்” தெரியாவிட்டாலும் இது ஹிலாரியின் திட்டமிட்ட சென்னை விஜயம் என்பதையும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு” என்பதும் இலங்கையுடன் விரும்பியோ விரும்பாமலோ நல்லுறவைப் பேண வேண்டும் என்பதையுமே தமிழக மக்களிற்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுமே ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தியின் சராம்சமாகும்.
ஈழக்கோரிக்கையினை ஆத்மார்த்தமாக ஏற்று அதற்காகவே தன்னை அர்ப்பணித்த வை.கோ.வை இறுதிநேரத்தில் தனது கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட ஜெயலலிதாவிற்கு, அல்லது தனது வெற்றிக்கு மறைமுகமாக உழைத்த சீமானை ஒரு மரியாதை நிமிர்த்தமாவது சந்திக்காத ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தி புதியதல்ல.
இருந்தாலும் தமிழ்நாட்டை அமெரிக்கா அணுகுவது புதியதொரு நடைமுறை. இவ்வாறு மிகவும் நுட்பமாக இந்த விவகாரதத்தில் காய் நகர்த்துவதற்கு பின்பலமாக உள்ளவர் ஈழப்பிரச்சினையை அக்குவேறு ஆணி வேறாக அறிந்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் என்ற அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலர் ஆவர்.
ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க வெளியுறவுச் சேவையில் சேர்ந்த போது அவர் பணியாற்றிய இடம் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதுவராலயம். அந்தக் காலப்பகுதியில் தமிழை புலமையாக அறிந்தது மாத்திரமல்லாமல் தமிழைப் பேசுகிற அளவிற்கு அவரது ஆர்வம் இருந்ததாக ஒரு தகவல். பின்பு இவரே இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவராக வந்து நோர்வேயின் பேச்சு முயற்சிகளின் போது அப்போது சிறீலங்காவிற்கான தூதுவராக இருந்தவர்.
2007ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி மட்டக்களப்பிற்கு இராஜதந்திரிகள் குழுவுடன் விஜயம் செய்திருந்த போது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட செல் தாக்குதலில் இரண்டு தூதுவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயப்பட்டார்கள். இவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக அப்போது சிறீலங்கா ஊடகங்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னாளில் முள்ளிவாய்க்கால் வரையான நாட்கள் வரை ஈழத்தமிழரின் விவகாரத்தில் பெயரடிபட்ட ஒருவர். இப்போது பதவியுயர்வு பெற்று துணை இராஜாங்கச் செயலர். இருந்தபோதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரதேசம் தென்னாசியாப் பிராந்தியம். அதனுள் சிறீலங்காவும் உள்ளடக்கம். எனவே இப்போதைய இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளின் கதாநாயகன் இவரேயாவர்.
இவர் 2009ல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அரச தரப்பு உருத்திரகுமாரன் தலைமையிலானவர்களுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோடு அதனைக் கொழும்புக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இருந்தபோதும் கனடாவிற்கு கப்பல்மூலம் அகதிகள் வருகை தந்தது அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் இட்டுச் சென்றது.
அதற்கான காரணம் அக் கப்பல் பயணத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகளே இருந்தார்கள் என்ற உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் அக் கப்பல் விடுதலைப்புலிகளுடையதே என்ற ஆதாரபூர்வத் தகவல்கள் என்பனவாகும்.
இதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தவிர்த்து ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமையை ஈழத்திலேயே தேடுவதற்கு வழிவகுத்தது.
இவ்வாறு ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமை புடம்போடப்பட்டு, சிறீலங்கா அமெரிக்காவின் இராஜதந்திர மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டு வந்தவேளையிலே தமிழ்நாட்டில் சிறீலங்காவில் பிரிவினை தான் தீர்வு என்ற கோதாவில் அல்லது தமிழீழத்திற்கு ஆதரவான நிலைப்பாடு வலுவடைந்து வந்தது. இது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவாது என்பதையும் தமிழகம் ஈழப்பிரச்சினைத் தீர்விற்கு எப்படி உதவலாம் என்பதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறீலங்காவிற்கான நிதியுதவிகளில் கால தாமதம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தடை என்ற ஒரு பொருளாதார நிலைப்பாட்டிற்குள் சென்றுள்ள அமெரிக்கா இந்த உள்ளுராட்சித் தேர்தலின் பின்னரான காலத்தில் ஒரு தீர்வுக்கு இலங்கையை செல்ல வைக்கப் போகிறது. அதற்கான மிரட்டல் ஆயுதமாக யுத்தக் குற்றவிசாரணையுள்ளிட்ட இதர தடைகள் இருக்கப் போகின்றன.
இதுவே இன்றைய தேதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த பார்வையாகும். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தற்காலிகமானதே! ஏனென்றால் அது எவ்வளவு காலத்திற்கு யதார்த்தமாயிருக்கும் என்பது அதன் அடுத்த முக்கிய தேவை உலகப் பந்தின் எந்தப் பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல, றொபேர்ட் பிளேக்கிற்குப் பதிலான வேறு ஒருவர் நியமிக்கப்பட்டாலும் மாற்றம் பெறும்.
 Here is video link copy this url and paste it.
http://www.youtube.com/watch?v=NUD02Duv_II&feature=player_detailpage

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை அடுத்தமாத முதல்வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு!

3peerநேற்று மஹிந்தவின் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் மற்றும் உதவி செய்தவர்கள் என பலர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 1992-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 1998-ல் பூந்தமல்லி சிறப்புக்கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 26 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 1999-ம் ஆண்டு மே மாதம் அந்த அப்பீல் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 22 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. அதில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர்.
இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று மனு அனுப்பினார். முருகன்- நளினி தம்பதிக்கு ஆருத்ரா என்ற மகள் இருக்கிறார். தற்போது அவர் முருகன் உறவினர்கள் அரவணைப்பில் இங்கிலாந்தில் படித்து வருகிறார். தன் மகளுக்காக தனது உயிருக்கு விலக்கு அளிக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நளினிக்கு தண்டனையை குறைக்கலாம் என்று கடிதம் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.
இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினார்கள். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.
தற்போது அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டணையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணை தமிழக சிறைதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 நாட்களுக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.



Sunday 21 August 2011

மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை


அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி ‘சிப்’ இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இச் ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.

சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது.

இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.



Sunday 7 August 2011

மிக அற்புதமான பயமுறுத்தும் படங்கள்

லண்டனில் கலவரம்: தமிழர் கடைகளும் எரியூட்டப்பட்டது !

லண்டன் புறநகர் பகுதியான டோட்டனம் என்னும் இடத்தில் மூண்ட கலவரம் காரணமாக 2 போலீஸ் வாகனம் உட்பட பல கட்டிடங்கள் எரியூட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பொலிசார் கடந்த வியாழக்கிழமை சுட்டுள்ளனர். இதனை எதிர்த்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் கலவரமாக மாறியது. இதனைத் தடுக்க வந்தபொலிசார் மீது அக்ரோஷமான தாக்குதலை நடத்திய ஆபிரிக்க இனத்தவர்கள் கண்ட இடங்களை எல்லாம் எரியூட்டியுள்ளனர். பொலிசாரின் வாகனம், ஒரு பேரூந்து மற்றும் கட்டிடங்களை அவர்கள் எரியூட்டியுள்ளனர். அல்டி எனப்படும் பல்பொருள் அங்காடி உட்பட பல கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

சுமார் 30 பொலிசார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்கள் சுமார் 40 குண்டர்களைக் கைதுசெய்தும் உள்ளனர். ஆபிரிக்க இனத்தவர்கள் அதிகம் வாழும் டோட்டனம் பகுதியும் மற்றும் பிரிக்ஸ்டன் பகுதியும் மிகவும் ஆபத்தான இடங்களாக பொலிசாரால் கருதப்படுகிறது. கொலை கொள்ளைகள் நிறைந்த இடமாகவும் அது கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் தகவல்கள்படி கலவரம் நடந்த இடம் ஒரு போர்களம்போலக் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் கட்டிடங்கள் எரிந்த நிலையில் உள்ளதாகவும் நேற்று இரவு கலவரத்தைப் பயன்படுத்தி பலர் வீடுகளிலும் எரியும் கட்டிடங்களையும் உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் ஆயிரக்கணக்கில் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது. எரியூட்டப்பட்ட கட்டிடங்களில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடை ஒன்றும் கருகிச் சாம்பலாகியுள்ளது எனவும் அறியப்படுகிறது. சிறிய பல்பொருள் அங்காடி வைத்திருந்த இவரது கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இக் கலவரத்தால் பல லட்சம் பவுண்டுகள் நாசமாகியுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ள அதேவேளை, பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தல உத்தியோகத்தர் இதற்கு கடும் கண்டன் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கலவரங்களை தாம் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவது இல்லை என அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

வேளாங்கன்னியில் சிங்களவர்கள் விரட்டியடிப்பு !

தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி கோவிலுக்கு அருகாமையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறக்கோரி தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடித்தியுள்ளனர். பணத்தைப் பார்க்காமல் மனச்சாட்சியைப் பாருங்கள் ! இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களை ஒரு கணம் யோசியுங்கள் ! என்ற கோகஷங்களால் லாட்ஜ் உரிமையாளர்கள் மனம்மாறி சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனை அடுத்து பெட்டி படுக்கைகளோடு சிங்களவர்கள் வேறு லாட்ஜ் ஒன்றைத் தேடி அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள் எங்கு தங்கினாலும் தாம் அங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துவோம் என தமிழ் உணர்வாளர்கள் கூறியுள்ளனர். இனப்படுகொலை புரிந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டு மண்ணை மிதிக்கும் தகுதி இல்லை என உணர்வாளர்கள் அதிர்வு இணைய நிருபரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் சிங்களவர்கள் தாக்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பியுள்ள நிலையில் , தமிழ் நாட்டில் தற்சமயம் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


முந் நாள் போராளிகளுக்கு செலவு 2.5 பில்லியனாம் !


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் முதல் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முதலாம் ஆண்டில் 1.8 பில்லியன் ரூபா செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் எந்தத் தரப்பினரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில நாடுகளின் அரசாங்கங்களும் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் யுத்த வலய மீள்குடியேற்ற நடவடிக்கைளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை பயன்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Friday 15 July 2011

ஊமை ஊரைக் கெடுக்கும்​, பெருச்சாளி பேரைக் கெடுக்கும்

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.




மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும். 25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ?

�மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். �சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க� என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா �லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?� என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது� என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா�. இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன.

ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.
சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே�. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ?

02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்.




இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், �அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?� என்று எழுதுகிறார்.




அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது. அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா� கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா�.. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள்.

ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். �கண்மணி, அன்போட�.� என்று அல்ல. �டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்� என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, �எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே� என்று பதில் எழுதுகிறார். ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது.






இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார்.

அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ?

இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ?

ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே�.. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ? கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன.

நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, �எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது� என்றார்.

இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, �செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்� என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார். ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை.

பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே�. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ? பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ?

மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் �காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்� என்று எழுதுகிறார்.

மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், �காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது� என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் �மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.�

எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு. இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்�. ?

2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார்.







கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.



கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.

Friday 8 July 2011

மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு' எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையில்...

இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தின் வடபிராந்திய துறைமுக அணுகலை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடனான செல்வாக்கை நாடுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இப்பிராந்தியத்தில் துறைமுகங்களை அமைக்கும் சீனாவின் முயற்சி குறித்து இந்திய பாதுகாப்பு திட்டமிடலாளர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிவதாகவும் இலங்கை தொடர்பான 8 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கையின் தென்கிழக்கு கரையோரத்தில் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது.

 பாகிஸ்தானின் கவாடர், பங்களாதேஷின் சிட்டகொங், பர்மாவின் சிட்டாவே ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கு சீனா உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடிப்பதற்கான அவர்களின் (இலங்கை அரசாங்கத்தின்) யுத்தத்தின்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மேற்கு நாடுகள் கோரியமை குறித்து கொழும்பு அரசாங்கமும் கவலையடைந்திருந்ததாக கூறப்படுகிறது

 அதேவேளை, வன்முறையான இனத்துவ பிரிவினை இயக்கமொன்றுக்கு எதிரான மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

 2009 ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ இற்கு எதிராக இராணுவ வெற்றிக்கு தலைமை தாங்குவதில் சிங்கள பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார் எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

 இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளினதும் பல நாடுகளினதும் கோரிக்கையை வீட்டோ அந்தஸ்துள்ள இரு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு சபை நிறைவேற்றும் வாய்ப்பு குறைவு எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

 இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐ.சி.சியை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) விசாரிப்பதற்கு பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கலாம். வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபை இவ்விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

 அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். ஏனெனில் அது சிங்கள தேசியவாதிகளின் மத்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் செல்வாக்கையே அதிகரிக்கச்செய்யும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday 20 June 2011

கார் ஒட்டுபவரா நீங்கள்? இந்தமாதிரி முடியுமா? (காணொளி இணைப்பு)







நீங்கள் கார் ஓட்டுபவராக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி உங்க காரை பாக் பண்ணமுடியுமா??? வீடியோவை பாருங்கள்… இது ஒரு பார்க்கிங் விளம்பரம் எனத்தெரிகிறது. ஆனால் முயற்சி செய்து விடாதீர்கள் … சேதாரங்களை சந்திக்க தயார் என்றால் தாராளமான முயற்சிக்கலாம்.

Wednesday 15 June 2011

அரபு இராச்சியத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணொருவர் பார்வையிழந்து காயங்களுடன் வீடு திரும்பியுள்ளார்:









மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற வாகரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு எஜமானால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கண்களின் பார்வையிழந்து உடலின் பல்வேறு உறுப்புக்கள் செயல்ழிந்து பாதிக்கப்பட்ட நிலையில நாடு திரும்பியுள்ளார்.கொழும்பிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை இவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 மட்டக்களப்பு வாகரை மத்தி கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 31 வயதான மனோகரன் பவானி என்பவரே இவ்வாறு அங்கவீனராக வீடு திரும்பியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தயாரான இவர் குடும்ப வறுமை காரனமாக 2003.06.01ஆம் திகதி சவூதி அரேபியவின் தமாம் பிரதேசத்தின் பரிதா எனுமிடத்தில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சென்றார்.

 சுமார் 2 வருடங்கள் கடந்தும் சம்பள பணம் தர மறுத்த எஜமானிடம் கேட்ட போதே இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். தனக்கு கண்களில் இரசாயன பதார்த்தமொன்றை ஊற்றி செயல் இழக்கச் செய்ததுடன் தன்னை கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு தீ வைத்ததாகவும் இதனால் தலைமுடி மற்றும் காதுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

 அத்துடன் இரும்பு கம்பியினால் தலை மற்றும் ஏனைய இடங்களில் தாக்கியதுடன் இரும்பு கோலால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட நிலமையை வெளியில் தெரிவிக்கவோ, கடிதம் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மனோகரன் பவானி தெரிவித்தார்.

 அங்குள்ள பொலிஸாரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமையை தெரிவித்தும் பலனின்றி மீண்டும் எஜமானிடம் கையளித்ததினால் சித்திரவதை மேலும் அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.

 தனக்கு ஏற்ப்பட்ட அவல நிலைமைக்கு காரணமான குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சவூதி அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் கிழக்கு மாகண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

சனல் - 4 வின் ஆவணப்படம் ஒளிபரப்பின் எதிரொலி:சிறிலங்காவின் கொடூரக் குற்றங்கள்


Monday 13 June 2011

A Preview of Future Disk Drives



Fast access: This prototype hard drive
 made using phase-change memory
 chips can read some data faster than a
 commercial flash hard disk.


A new type of data storage technology, called phase-change memory, has proven capable of writing some types of data faster than conventional flash based storage. The tests used a hard drive based on prototype phase-change memory chips.
Disks based on solid-state, flash memory chips are increasingly used in computers and servers because they perform faster than conventional magnetic hard drives. The performance of the experimental phase-change disk drive, created by researchers at University of California San Diego, suggests that it won't be long before that technology is able to give computing devices another speed boost.
The prototype created by the researchers is the first to publically benchmark the performance of a phase-change memory chips working in a disk drive. Several semiconductor companies are working on phase-change chips, but they have not released information about storage devices built with them.
"Phase-change chips are not quite ready for prime time, but if the technology continues to develop, this is what [solid state drives] will look like in the next few years," says Steve Swanson, who built the prototype, known as Onyx, with colleagues. It had a data capacity of eight gigabytes and went head-to-head with what Swanson calls a "high-end" 80 GB flash drive made for use in servers.

Two New Tools for Self-Tracking






Keeping watch: This device, made by Basis,
tracks heart rate, temperature, and stress levels.
Credit: Basis 


As Nadeem Kassam sauntered down the hall of the Computer History Museum in Mountain View, California, over Memorial Day weekend, all attention was on his wrist. The museum was host to the first annual Quantified Self conference, a gathering of people who use different tools to record a variety of personal metrics with the goal of improving their health, happiness, and productivity.
Kassam was sporting the hottest new fitness monitoring gadget: a device that looks and acts like a watch, but which also measures heart rate and other physiological factors. The monitor, made by self-tracking startup called Basis (which Kassam cofounded), is unique in the number of metrics it tracks; it detects heart rate from the wrist using near infrared spectroscopy, along with both skin and ambient temperature, and galvanic skin response, a measure of sweat on the skin that is linked to both physical activity and stress or excitement. Only a few people have been selected as beta testers for the device, which is slated to come out "soon."
"We analyze five different data streams and figure out what people are doing in the context of life," says Julie Wilner, product director at Basis. "High heart rate and temperature probably means someone is exercising." Low activity, as recorded by the accelerometer, suggests the wearer is sleeping. The device also tracks quality of sleep based on movement during this phase. It combines various measures to calculate the number of calories burned during the course of a day. Accompanying software helps users track and visualize how they are progressing over time. "Are they becoming more active?" says Wilner. "Do they get better or worse sleep on certain day of the week?"
The Basis watch is one of a growing number of new tools that seeks to passively collect data on the wearer's health and behavior with the aim of helping them to change it for the better. These devices are part of the new movement in self-tracking, enabled by a new generation of wireless devices and smart phone apps to track exercise, nutrition, sleep, mood, and other variables.  "In the past, only a motivated few would keep a diary for more than a few weeks," says Wilner. "We want to bring these tools to people who wouldn't do this on their own, people who make New Year's resolutions but don't keep them."

Two New Tools for Self-Tracking

Keeping watch: This device, made by Basis,
tracks heart rate, temperature, and stress levels.
Credit: Basis 


As Nadeem Kassam sauntered down the hall of the Computer History Museum in Mountain View, California, over Memorial Day weekend, all attention was on his wrist. The museum was host to the first annual Quantified Self conference, a gathering of people who use different tools to record a variety of personal metrics with the goal of improving their health, happiness, and productivity.
Kassam was sporting the hottest new fitness monitoring gadget: a device that looks and acts like a watch, but which also measures heart rate and other physiological factors. The monitor, made by self-tracking startup called Basis (which Kassam cofounded), is unique in the number of metrics it tracks; it detects heart rate from the wrist using near infrared spectroscopy, along with both skin and ambient temperature, and galvanic skin response, a measure of sweat on the skin that is linked to both physical activity and stress or excitement. Only a few people have been selected as beta testers for the device, which is slated to come out "soon."
"We analyze five different data streams and figure out what people are doing in the context of life," says Julie Wilner, product director at Basis. "High heart rate and temperature probably means someone is exercising." Low activity, as recorded by the accelerometer, suggests the wearer is sleeping. The device also tracks quality of sleep based on movement during this phase. It combines various measures to calculate the number of calories burned during the course of a day. Accompanying software helps users track and visualize how they are progressing over time. "Are they becoming more active?" says Wilner. "Do they get better or worse sleep on certain day of the week?"
The Basis watch is one of a growing number of new tools that seeks to passively collect data on the wearer's health and behavior with the aim of helping them to change it for the better. These devices are part of the new movement in self-tracking, enabled by a new generation of wireless devices and smart phone apps to track exercise, nutrition, sleep, mood, and other variables.  "In the past, only a motivated few would keep a diary for more than a few weeks," says Wilner. "We want to bring these tools to people who wouldn't do this on their own, people who make New Year's resolutions but don't keep them."