Sunday, 4 December 2011

தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்த கனடிய தமிழர் ( Video in)

கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.
தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4o28NFX7qJg

96 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் !

உலக புகழ் பெற்ற குளிர்பானம் ‘கோக கோலா’. அமெரிக்காவின் கொலம்பஸ் நகரை சேர்ந்த பார்மசிஸ்ட் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவர் 1886ல் இந்த பானத்தை கண்டுபிடித்தார். ஆசா காண்ட்லர் என்பவர் 1889ல் இதன் தயாரிப்பு உரிமையை பெற்று, 1892ல் தி கோக கோலா கம்பெனியை தொடங்கினார்.



அந்த கால கட்டத்தில், தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது. இந்நிலையில், பாட்டில் வடிவத்தை மாற்ற கோக் கம்பெனி 1915ல் போட்டி அறிவித்தது.
தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்’ என்பது கண்டிஷன். இயர்ல் டீன் என்பவர் வரைந்து அனுப்பிய டிசைன் சிறந்ததாக தேர்ந் தெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோதனைக்காக சில பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
அடிப்பகுதியைவிட நடு பகுதி குண்டாக இருந்ததால், கன்வேயர் பெல்ட்டில் செல்லும்போது பாட்டில் விழுந்துவிட்டது. பின்னர், டிசைன் சற்று மாற்றப்பட்டு, பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
சோதனைக்காக தயாரித்ததில் 2 பாட்டில்கள் மிஞ்சின. ஒன்று, அட்லான்டாவில் உள்ள கோக் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பாட்டிலை இயர்லின் பேரன் பிராட் வைத்திருந்தார்.
ஜூலியன் நிறுவனம் மூலமாக அதை அவர் தற்போது ஏலம் விட்டார். 96 ஆண்டு பழமையான கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இயர்ல் வரைந்து அனுப்பிய பேப்பர் ரூ.1.16 கோடிக்கு ஏற்கனவே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.