தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் முதல் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முதலாம் ஆண்டில் 1.8 பில்லியன் ரூபா செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் எந்தத் தரப்பினரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில நாடுகளின் அரசாங்கங்களும் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் யுத்த வலய மீள்குடியேற்ற நடவடிக்கைளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை பயன்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment