இறுதிக் கட்ட போரின் போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவு மதாந்த சம்பளம் வழங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உறுப்பினர் ஒருவருக்கு தலா மூவாயிரம் ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மறைந்து வாழும் சுமார் ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஊதியம் வழங்கப்படுவதாக அரச புலானய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் ஒருவரினால், தென் இந்திய புலித் தலைவர் ஒருவருக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறித்த உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை மஹாபோதி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நபர்கள், ஊதியம் பெற்றுக்கொள்ளும் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர்களை தொடர்ந்தும் அமைப்பில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறு மாதாந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment