Friday, 3 June 2011

செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்!




“செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?! ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது!

ஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும்?! இதுக்கு ஒரு முக்கிய காரணம், செக்ஸ் பற்றிய செய்திகள (முண்டியடிச்சிக்கிட்டு) முதல் பக்கத்துலயோ, பிரத்தியேகமாகவோ பிரசுரிக்கிற நம்ம ஊடகங்கள்தான்னு சொல்லனும்!

“செக்ஸுங்கிறது ஒரு வகையான பசி! தினமும் மனிதனுக்கு ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம்! உண்மைதான், செக்ஸ் ஒரு பசிதான். ஆனா, நம்ம சமுதாயத்துல அது வெறும் பசியா மட்டுமே பார்க்கப்பட்டிருந்தா, செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக குறைவுங்கிறது என்னோட புரிதல்!

“ஏய்….என்னப்பா இது இழுவ! சீக்கிரம் மேட்டருக்கு வாப்பா”ன்னு நீங்க சவுண்டு விடுறதுக்கு முன்னாடி நான் பதிவுச் செய்திக்கு வந்துடறேன். செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் மக்களுக்கு இருக்க ஒரு முக்கிய காரணம், அதுல இருக்குற பல சுவாரசியங்கள், புதுசு புதுசா வெளிவருகிற/நமக்குத் தெரியாத பல செய்திகளே. அப்படிப்பட்ட 10 சுவாரசியமான, செக்ஸ் குறித்த ஆய்வுகளைப் பத்தித்தான் நீங்க இப்போ படிக்க போறீங்க…..
செக்ஸுக்கு வயதில்லை! (Sex Is Ageless, for Some)

பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, 75 முதல் 85 வயதானவர்கள், மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டில் New England Journal of Medicine என்னும் மருத்துவ வார இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை!  பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதே?!
செக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்! (Men Outlive Women Sexually)

பெண்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆயுட்காலம்/வாழ்நாளை கொண்ட ஆண்கள், செக்ஸ் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தலைகீழாக இருக்கிறார்கள்! அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)
செக்ஸ் குற்றஉணர்வு பாலினத்தை பொறுத்தது! (Guilt Is Gender-Dependent)

செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது! ஆனால், செக்ஸ் துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!
செக்ஸ் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் பொறுத்திருக்கிறார்கள்! (Why Women Wait)

தனக்கு சரியான செக்ஸ் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு!
துன்பத்துக்கு அடிப்படையாகும் இன்பம்! (Pleasure Can Hurt)

தங்களின் 20, 30 வயதுகளில் செக்ஸில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்க்கும் பின்னுமான செக்ஸ் செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்!
செக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவை! (Sex and Happiness Go Together)

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். செக்ஸில் அதிகமாக ஈடுபடுபவதால் சந்தோஷமாக இருக்கிறார்களா, சந்தோஷமாக இருப்பதால் அதிகம் செக்ஸில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்! (Penis Extenders Might Work)

செக்ஸ் மர்மங்கள்ல ஒன்றான ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க சிகிச்சைகள் பற்றிய செய்திகள் சமுதாயத்தில் ஏராளம். அதுபோன்ற சிகிச்சைகள் சில பலன் தரலாம் என்கிறது ட்யூரின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து, ஆண்குறியை ஒரு இன்ச் நீளம்வரை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள்! அது எந்த நிறுவனம்னு கேக்காதீங்கோவ்…..ஏன்னா அவங்க அதை சொல்லல?!

இல்லாத ஒரு செக்ஸ் உச்சகட்ட புள்ளி?! (The G-Spot May Not Exist)

இதுவரைக்கும் பல பேர அல்லோ கல்லோலப் பட வைக்கிற உலக மகா கேள்விகள்ல ஒன்னு, “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி அப்ப்டீன்னு ஒன்னு இருக்கா இல்லியா?” அப்படீங்கிறது! ஆனா, அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
செக்ஸ் வாசனைகள்! (Sex Smells)

செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனை/ நாற்றத்தைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!
செக்ஸை தூண்டும் ஆன்மீகம்?! (Spirituality is Sexy)

ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!

No comments:

Post a Comment