வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக இந்தியா கூறுவது ஒரு பொய் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும், வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். |
தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொண்று குவிக்கும் ஒரு நாடு இந்தியா என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குள் வாழ்வதாகவும், கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே அது தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதா எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியா வளர்ச்சியடைந்ததாகக் கூறுவது ஒரு பொய் எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது லண்டனுக்கு இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியா குறித்து தெரிவித்துவரும் கருத்துகள் மேற்குலக நாடுகளால் கருத்தில்கொள்ளப்படுவதோடு, இந்தியாவும் இதனை உற்றுக் கவனித்தவண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் என்று அருந்ததி ராய் அவர்கள் பாடுபடுவது மேற்குலகை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதே வேளை இந்திய அரசு அவர்மேல் கடும் ஆத்திரமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பல நாடுகளுக்கு மன்மோகன் சிங் சென்று இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாகச் சொல்லிவர, சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் அருந்ததி ரோய் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அது இந்திய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. |
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Sunday, 5 June 2011
இந்தியா தான் ஒரு வல்லரசு என பொய் சொல்கிறது: அருந்ததி ராய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment